அஜித்தின் மங்காத்தா 2… ரூட்டு போடும் வெங்கட் பிரபு..!


அஜித்தின் மங்காத்தா 2… ரூட்டு போடும் வெங்கட் பிரபு..!

நடிகர் அஜித்துக்கும் சரி இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் சரி ரொம்பவே ஸ்பெஷலான படம் மங்காத்தா.

தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த படம் இது. இதில் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் ரசிகர்களிடையே படு பிரபலம் ஆனது.

இதில் அஜித்துடன் அர்ஜீன், த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, வைபவ், அஸ்வின், ப்ரேம்ஜி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

எனவே இதனைத் தொடர்ந்து மீண்டும் மங்காத்தா 2 உருவாகுமா? என்ற கேள்வி பல நாட்களாக சமூக வலைத்தளங்களில் கேட்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மங்காத்தா 2 வரவேண்டுமா என ரசிகர் ஒருவர் கேட்க, அதை ரீட்வீட் செய்து ரசிகர்களிடமே கேட்டார் வெங்கட் பிரபு.

அதற்கு பதிலளித்த ப்ரேம்ஜி.. “அனைவரும் ரெடி. நானும் ரெடி” என கூறியுள்ளார்.

அனைவரும் ரெடிதான்.. ஆனா அஜித் சார்.. ஒன்னும் சொல்லலையே பாஸ்..