விஜய்யை வைத்து அப்படி படம் பண்ண மாட்டேன்.. மங்காத்தா இயக்குனர்..!


விஜய்யை வைத்து அப்படி படம் பண்ண மாட்டேன்.. மங்காத்தா இயக்குனர்..!

அஜித்துடன் ஜி படத்தில் நடித்த வெங்கட் பிரபு, ஒரு காலத்தில் அவரை வைத்து மங்காத்தா என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.

ஆனால் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான பிரியாணி மற்றும் மாஸ் படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

தற்போது சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார்.

மங்காத்தா படத்தின் தொடர்ச்சி உருவாகுமா? என்ற கேள்விக்கே பதில் கிடைக்காத நிலையில், தற்போது விஜய்யை வைத்து படத்தை இயக்குவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இவரது சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“விஜய் சாரை இயக்க காத்திருக்கிறேன். ஆனால் அவரை வைத்து சீரியஸ் படம் கொடுக்க மாட்டேன். அவருக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு ஏற்ற போல் குஷியான காமெடி படத்தை கொடுப்பேன்” என்றார்.