மங்காத்தா, மாஸ் ஹீரோக்கள் பற்றி… வெங்கட் பிரபு!


மங்காத்தா, மாஸ் ஹீரோக்கள் பற்றி… வெங்கட் பிரபு!

‘ஏகன்’, ‘அசல்’ என இரண்டு தோல்விப் படங்களை கொடுத்த அஜித்திற்கு அவசரமாய் ஒரு வெற்றி தேவைப்பட்டது. வெற்றி கொடுக்க காத்திருந்தார்… ஆனால் கைகொடுக்க இயக்குனர் வேண்டுமே… அப்படி கிடைத்தவர்தான் வெங்கட் பிரபு.

இருவரும் இணைந்து ‘மங்காத்தா’ என்ற சூப்பர் டூப்பர் அதிரடி ஹிட் படத்தை கொடுத்தனர். மற்ற நாயகர்கள் செய்ய தயங்கிய கெட்டப்பை தேர்ந்தெடுத்தார். தன் நிஜ உருவமான நரைத்த தலை முடியுடன் நடித்திருந்தார் தல. இப்படத்திலிருந்துதான் சால்ட் அண்ட் பெப்பர் லுக் பெரிதாக பேசப்பட்டது. அஜித்தின் திரையுலக வாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

அதுபோல ‘அஞ்சான்’ என்ற தோல்வி படத்தை கொடுத்த சூர்யா ஒரு ஹிட் படம் கொடுக்க காத்திருக்கிறார். எனவே இவரும் வெங்கட் பிரபுவிடம் கை கோர்த்து இருக்கிறார். இந்நிலையில் இரண்டு பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரிந்த தன் அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்திருந்தார் வெங்கட் பிரபு.  அதில் கூறியதாவது…

“மங்காத்தா படத்திற்கு அஜித் சார் என்னிடம் ஒன் லைன் மட்டுமே கேட்டார். உடனே நடிக்க சம்மதித்து விட்டார். ஆனால் சூர்யா சார் என்னிடம் மாஸ் படத்தின் முழுக்கதையையும் கேட்ட பிறகே நடிக்க ஓகே சொன்னார்” இவ்வாறு அவர் கூறினார்.