வெங்கட்பிரபுவின் ‘சென்னை 28′ பார்ட் 2… யார் யார் நடிக்கிறார்கள்..?


வெங்கட்பிரபுவின் ‘சென்னை 28′ பார்ட் 2… யார் யார் நடிக்கிறார்கள்..?

பிரியாணி, மாஸ் போன்ற மாபெரும் தோல்வி படங்களை கொடுத்தாலும் ‘சென்னை 28′ மற்றும் மங்காத்தா ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தவர் வெங்கட் பிரபு.

‘மங்காத்தா’ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா? வாரதா? என அவருக்கே தெரியாத நிலையில், ‘சென்னை 28′ படத்தின் இரண்டாம் பாகத்தை மட்டும் சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்திருந்தார்.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஆகியவற்றை வெளியிட்டு இருக்கிறார் வெங்கட்பிரபு. ப்ளாக் டிக்கெட் என்ற தன் சொந்த நிறுவனம் மூலம் அவரே தயாரிக்கிறாராம்.

யுவன் இசையமைக்க இருக்கும் இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை மட்டும் அவர் வெளியிடவில்லை. விரைவில் வெளியிடுவார் என்று நம்புவோம்.