கௌதம் மேனன், வெங்கட் பிரபு கூட்டணியில் புதுப்படம்..!


கௌதம் மேனன், வெங்கட் பிரபு கூட்டணியில் புதுப்படம்..!

சூர்யா நடித்த ‘மாசு (எ) மாசிலாமணி’ படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு எந்தப் படங்களையும் இயக்கவில்லை. தற்போதுதான் தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் இறங்கியுள்ளார்.

இவர் இயக்கி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘சென்னை 28′ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணம் இருக்கிறதாம். அதற்கான ஸ்கிரிப்டை ரெடி செய்து வருவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிக்கவுள்ள ஒரு புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் ரசிகர்களை வந்தடையும்.