வெற்றி மாறனுக்காக கௌதம் மேனனை நெருக்கும் தனுஷ்..!


வெற்றி மாறனுக்காக கௌதம் மேனனை நெருக்கும் தனுஷ்..!

துரை செந்தில்குமார் இயக்கும் கொடி படத்தை முடித்துவிட்டு கெளதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.

இதனை அவரும் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதியாக கூறியிருந்தார். அதனையடுத்து ஜுன் மாதம் முதல் ஹாலிவுட் படத்தில் நடிப்பார் என்றும் தனுஷ் தரப்பில் சொல்லப்பட்டது.

இதனால் வெற்றிமாறன் இயக்கவுள்ள ‘வடசென்னை’ படப்பிடிப்பு தாமதம் ஆகும் என்ற தகவல்கள் வெளியாயின.

ஆனால் இது தொடர்பாக வெற்றிமாறன் கூறியதாவது… ‘நாங்கள் திட்டமிட்டப்படி மே மாதம் ‘வடசென்னை’ படப்பிடிப்பு தொடங்கப்படும்” என்றார்.

இதனால், வெற்றிமாறனுக்காக, கௌதம் மேனன் படத்தை குறுகிய காலத்தில் முடித்துக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம் தனுஷ்.