விஜய் படமே, விஜய் படத் தயாரிப்பாளருக்கு வைத்த செக்..!


விஜய் படமே, விஜய் படத் தயாரிப்பாளருக்கு வைத்த செக்..!

உலகம் முழுவதும் விஜய் தெறிக்க விட்டாலும் தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு ஏரியாவில் படம் வெளியாகவில்லை.

அதிக விலை மற்றும் மினிமம் கியாரண்டி அடிப்படையில்தான் படம் தருவோம் என்று தாணு கூறியதால், நாங்கள் படத்தை வெளியிடவில்லை என செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில், தெறி படத்தை வெளியிடாத தியேட்டர்களுக்கு இனி எந்த புதிய படங்களை தரமாட்டோம் என தயாரிப்பாளர்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனால் இன்று வெளியாகும் சசிகுமாரின் வெற்றிவேல் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஏரியாவில் இப்படம் வெளியாகவில்லை.

இப்படத்தின் தமிழக உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இதே நிறுவனம்தான் விஜய்யின் கத்தி படத்தை தயாரித்தது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

பின்குறிப்பு : செங்கல்பட்டு பகுதியின் விநியோக உரிமையை மட்டும் வெற்றிவேல் தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டதாம் லைகா.