சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’வில் இணைந்த ‘பாகுபலி’ கலைஞர்..!


சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’வில் இணைந்த ‘பாகுபலி’ கலைஞர்..!

ரஜினிமுருகனை தொடர்ந்து, ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவரின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர் டி ராஜா படத்தை தயாரிக்கிறார்.

ரெமோ படத்தின் தொழில்நுட்ப பணிகளுக்கு பிரபலமான கலைஞர்களே பணியாற்றி வருகின்றனர். இதன் சவுண்ட் இன்ஜினியராக ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி பணியாற்றி வருவது நாம் அறிந்ததே.

தற்போது இந்தக் கூட்டணியில் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பெரிதும் பேசப்பட்ட VFX பணிகளை மேற்கொண்ட கமல கண்ணன் பணியாற்றவிருக்கிறாராம்.

பல பிரபலங்கள் ஒரே படத்தில் இணைந்து பணியாற்றி வருவதால் ‘ரெமோ’ படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.