விஷாலுக்காக மிஷ்கின் படத்தை தயாரிக்கும் விக்னேஷ்..!


விஷாலுக்காக மிஷ்கின் படத்தை தயாரிக்கும் விக்னேஷ்..!

இருபது வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பல வெற்றி தோல்விகளை சந்தித்தவர் விக்னேஷ்.

சமீபத்தில் இவர் நாயகனாக நடித்த அவன் அவள் படம் திரைக்கு வந்தது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.

இதனால் பல கோடி நஷ்டத்தை சந்தித்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறாராம் விக்னேஷ்.

சுராஜ் இயக்கும் கத்தி சண்டை படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்கிறார் விஷால்.

இப்படத்தைதான் விக்னேஷ் தயாரிக்க போகிறாராம்.

நடிகர் சங்கம் தாண்டியும் விக்னேஷ்-விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.