அஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா?


அஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா?

ரஜினிமுருகன் படத்தை தொடர்ந்து ரெமோ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்க ஆர் டி ராஜா தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறவுள்ள சிவகார்த்திகேயனுக்கான ஓப்பனிங் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளாராம்.

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற அதாரு அதாரு பாடலையும், தனுஷின் மாரி படத்தில் இடம்பெற்ற தப்பத்தான் தெரியும் என்ற பாடலையும் விக்னேஷ் சிவன்தான் எழுதியிருந்தார்.

இந்த இரு பாடல்களும் அந்தந்த நடிகர்களுக்கு மாஸ் ஹிட் பாடலாய் அமைந்தது.

எனவே சிவகார்த்திகேயனுக்கும் அதுபோல் அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.