சிவகார்த்திகேயனை இயக்கும் நானும் ரௌடிதான் இயக்குனர்?


சிவகார்த்திகேயனை இயக்கும் நானும் ரௌடிதான் இயக்குனர்?

‘போடா போடி’ மற்றும் ‘நானும் ரௌடிதான்’ ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இந்த இருபடங்களுக்கும் இடையில் அஜித், தனுஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கு பாடல் எழுதியுள்ளார். அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்புதிய படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது. அனிருத் இசையமைக்க ராஜுசுந்தரம் இப்பாடலுக்கு நடனம் அமைத்தார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கி சமீபத்தில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தை மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தன் அடுத்த படத்தை யாருக்காக இயக்கவிருக்கிறார்? அதில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா? என்று ரசிகர்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். இதுகுறித்து அவர் கூறியதாவது…

”எனது அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்க சில நாட்கள் ஆகும். இதுவரை எந்த ஒன்றிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.