அஜித், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயன்!


அஜித், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயன்!

சிம்பு வரலட்சுமி நடித்த ‘போடா போடி’ மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதனிடையில் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். பின்னர் ஒரு சில படங்களுக்கு பாடல்களை[யும் எழுதி வந்தார்.

இவர் இயக்கிய போடா போடி’ படத்தில் பாடல்களை எழுதினார். அதன் பின்னர் ‘வணக்கம் சென்னை’, அஜித்தின் என்னை அறிந்தால்தனுஷின் மாரி’, அனிருத்தின் ஆகோ ஆகிய படங்களில் பாடல்களை எழுதி வருகிறார். இவர் வரிகளில் உருவான பாடல்கள் நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து பாடல்களை எழுதி வருகிறார்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதற்கு படத்தில் இடம்பெற்ற பாடல்களும் முக்கிய காரணமாக கூறப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற ‘தங்கமே…’,  ‘நானும் ரவுடிதான்….’, ‘கண்ணே கண்ணே…’, ‘என்னை மாற்றும் காதலே…’. ஆகிய பாடல்களை எழுதியிருந்தார். தனுஷ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கும் பாடல்களை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.