‘விஜய் 59’ படத்தின் தலைப்பு உறுதியானது!


‘விஜய் 59’ படத்தின் தலைப்பு உறுதியானது!

தமிழ் சினிமாவுல ஒரு படத்தோட சூட்டிங் ஆரம்பிச்சு பாதி சூட்டிங் முடிஞ்சாலும்  பேரு வைக்கிறது இல்ல என்ற ட்ரெண்ட் இப்போ.  இதுனால அந்த படத்துக்கு ஒரு நம்பரை வைச்சித்தான் கூப்பிடுறோம். இப்போ என்ன சொல்ல வர்றோம்னு புரிஞ்சிருக்குமே.. நம்ம இளைய தளபதியோட படத்தை பத்திதான் சொல்றோம்.

அட்லி இயக்கத்துல விஜய் நடித்து வரும் படத்துக்கு டைட்டில் வைக்க பெரும் போராட்டமே நடந்து வருது. முதல்ல இந்தப் படத்துக்கு ‘வெற்றி’ அல்லது ‘காக்கி’ என வைக்கலாம்னு குழப்புனாங்க. ஆனா இப்போ ‘தெறிக்க’ விடும் சீசன் என்பதால் இன்னும் கொஞ்சம் பவர் புல்லா ஒரு டைட்டில் வைக்கலாம் என முடிவு பண்ணிட்டாங்க. அந்த முடிவுல கிடைச்ச டைட்டில்தான் ‘தாறுமாறு’.   இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், மீனா மகள் நைனிகா, பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி தாணு தயாரிக்கிறார்