விஜய் 59 அப்டேட்ஸ் : கோவா பறக்கும் இளையதளபதி டீம்!


விஜய் 59 அப்டேட்ஸ் : கோவா பறக்கும் இளையதளபதி டீம்!

அட்லி இயக்கி விஜய் நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளது. ஆனால் பெயரிடப்படுவதற்கு முன்பே படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார் இயக்குனர் அட்லி.

இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், மீனா குழந்தை நைனிகா, பிரபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதுநாள் வரை சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக கோவா செல்லவிருக்கின்றனர் படக்குழுவினர்.

இப்படத்தில் வில்லனாக பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் நடிக்கிறார். இவருடன் மற்றொரு வில்லனாக சத்யராஜ் நடிக்கக்கூடும் என்ற புதிய தகவல் தற்போது வந்துள்ளது. ஆனால் இதற்கு முன்பு வந்த வாய்ப்பை சத்யராஜ் நிராகரித்தார் என்றும் கூறப்பட்டது. இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.