‘புலி பர்ஸ்ட், அப்புறம்தான் டைட்டில்’ – விஜய் புதுக்கணக்கு!


‘புலி பர்ஸ்ட், அப்புறம்தான் டைட்டில்’ – விஜய் புதுக்கணக்கு!

சிம்புதேவன் இயக்கி விஜய் நடித்துள்ள ‘புலி’ அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் பற்றி டி.ஆர். பேசிய பேச்சு இன்றும் இணையதளங்களை கலக்கி வருகிறது.

இந்நிலையில் விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சமந்தா, எமி, பிரபு, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். ரஜினி நடித்த ‘மூன்று முகம்’ படத்தின் தலைப்பை இப்படத்திற்கு பயன்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘புலி’ படம் ரிலீஸான பிறகே அட்லி இயக்கும் படத்தின் தலைப்பை வெளியிடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது படத்தின் தலைப்பு வெளியானாலும் ‘புலி’ அலை அதை காணாமல் போகச் செய்துவிடும். எனவே ‘புலி’ வெளியான பிறகு படத்தின் தலைப்பை வெளியிட்டால் அதற்கான பப்ளிசிட்டி அப்போது கிடைக்கும் என விஜய் புதுக்கணக்கு தீட்டியுள்ளதாக தெரிகிறது.