சூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..!


சூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..!

பரதன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்திற்கு தற்காலிமாக விஜய் 60 எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் வருகிற ஜுன் மாதம் 22ஆம் தேதி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார் விஜய்.

எனவே விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவிருக்கிறார்களாம்.

கூடவே படத்தின் தலைப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படத்தின் தலைப்பை தெறி படத்தை போல் கால தாமதம் செய்து வெளியிட்டால் இன்னும் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் படத் தலைப்பை வெளியிடவில்லையாம்.

படத்தலைப்பை மட்டும் ஆகஸ்ட் 15 அன்று வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யாவின் மாஸ் படத்திற்கும் படத்தலைப்பை வெளியிடாமல் வெறும் போஸ்டரை மட்டும் வெளியிட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.