ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ஓகே செய்த விஜய்!


ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ஓகே செய்த விஜய்!

நேற்று தமிழ் சினிமாவில் மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்ட விஷயம் விஜய் படத்தின் அடுத்த இயக்குனர் பரதன் என்பதுதான். பல மாதங்களாக பலரும் எஸ்.ஜே. சூர்யா, ஜெயம் ராஜா, கார்த்திக் சுப்புராஜ் என பலவாறு பேசிக் கொண்டிருக்க எவரும் எதிர்பாராத வகையில் ‘அழகிய தமிழ் மகன்’ இயக்குனர் பரதனுக்கு வாய்ப்பளித்துள்ளார் தளபதி.

இதுமட்டுமில்லாமல் தனது அடுத்த படமான ‘விஜய் 61’ படத்தையும் உடனே ஓகே செய்துவிட்டதாக தகவல் வந்துள்ளன. ‘ஸ்பீடு டைரக்டர்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஹரி அவர்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இவர்கள் இருவரும் ஒரு படத்திலாவது இணைய மாட்டார்களா? என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி கூடுதல் சந்தோஷத்தை தந்திருக்கும். இது ஹரி பாணியில் உள்ள கிராமத்து கதையாக இருந்தாலும் விஜய்க்கு ஏற்ற பின்னணியில் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை 2017ஆம் ஆண்டு தீபாவளிக்கு கொண்டு வர தற்போதே முடிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.