ஹரியை கழட்டிவிட்ட விஜய்.. அடுத்த பட இயக்குனர் கேம் ஓவர்!


ஹரியை கழட்டிவிட்ட விஜய்.. அடுத்த பட இயக்குனர் கேம் ஓவர்!

என்னப்பா இது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இயக்குனர் பேர் வருது??

எஸ்.ஜே.சூர்யா, மோகன் ராஜா, கார்த்திக் சுப்புராஜ் என விஜய்யின் அடுத்த பட இயக்குநர் யாரென முடிவாகாமல் தலைசுற்ற விடுகிறது பரவும் செய்திகள்.

‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய அட்லி இயக்கும் படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்துக் கொண்டு தற்போது கோவா சென்றுள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என்பதால் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற ஆளாளுக்கு ஒரு யூகத்தை செய்தியாக்கி வருகின்றனர்..

எஸ்.ஜே.சூர்யா, மோகன் ராஜா, கார்த்திக் சுப்புராஜ் என பலப் பெயர்கள் இருந்தாலும் இதில் எஸ்.ஜே.சூர்யாதான் இயக்குவார் எனக் கூறப்பட்டது.

ஆனால் எதிர்பாராத வகையில் இந்த வாய்ப்பு இயக்குனர் பரதனுக்கு கிடைத்துள்ளதாக சற்றுமுன் வந்த தகவல் தெரிவிக்கின்றது.

முதலில் பரதன் கூறிய கதையை ஹரி இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் பரதனே இயக்கட்டும் என விஜய் கூறிவிட்டாராம். பரதன்- விஜய் இரண்டு வேடங்களில் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியவர்.

இப்படத்தை தனுஷின் ‘படிக்காதவன்’, அஜித்தின் ‘வீரம்’ ஆகிய படங்களைத் தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சித்திரை முதல்நாளில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.