‘தளபதி 60’ படத்தில் விஜய்யுடன் இரண்டு நாயகிகள்..!


‘தளபதி 60’ படத்தில் விஜய்யுடன் இரண்டு நாயகிகள்..!

தெறியின் மிகப்பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படம் தளபதி 60.

பரதன் இயக்கிவரும் இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இவர்களுடன் சதீஷ், ஸ்ரீமன், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், ஹரிஸ் உத்தமன், மைம் கோபி, சரத் லோஹிதஸ்வா ஆகியோரும் நடிக்கவிருக்கின்றனர்.

தற்போது அபர்ணா வினோத் என்பரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார்.

ஞான் நின்னோடூ கூடியேந்து என்ற மலையாள படத்தில் அறிமுகமான அபர்ணா, தொடர்ந்து கோஹினுர் என்ற மலையாள படத்தில் நடித்தார். இவர் கடந்தாண்டில்தான் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது, தளபதி 60 படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு மே மாதம் 2ஆம் தேதி தொடங்குகிறது.