பரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…?


பரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…?

பரதன் இயக்கும் தளபதி 60 படத்தில் கீர்த்தி மற்றும் அபர்ணாவுடன் இரண்டு வேடங்களில் டூயட் பாடி வருகிறார் விஜய்.

இப்படத்தில் விஜய்யுடன் சதீஷ், ஸ்ரீமன், டேனியல் பாலாஜி, ஜெகதிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் இடம் பெறும் ஒரு சண்டைக் காட்சியை நேற்று முதல் படமாக்கி வருகின்றனர்.

இதனையடுத்து, நெல்லை மாவட்டத்தில் ஒரு மாத சூட்டிங் நடைபெற இருக்கிறது.

பிரபல நிறுவனமான நாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்து வரும் நிலையில், இப்படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை என்ற தலைப்பை வைக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்து, 1965ஆம் ஆண்டு வெளியான படத்திற்கும் இதே தலைப்புதான் வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.