‘விஜய் 60’ முதல் புதிய முடிவெடுக்கும் இளையதளபதி!


‘விஜய் 60’ முதல் புதிய முடிவெடுக்கும் இளையதளபதி!

தமிழில் இன்றைய முன்னணி நடிகர்களில் உடலில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே இளமை துள்ளலுடன் இருப்பவர் விஜய். அதிரடி ஆக்ஷன் கதைகளுக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கும் மிகவும் பொருந்தி வருபவர் இவர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதல் மட்டும் காமெடி படங்களில் நடித்து வந்தார். இவரின் காமெடியுடன் காதல் கலந்த இந்த ஆக்ஷன் படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. ‘திருமலை’, ‘வசீகரா’, ‘போக்கிரி’, ‘காவலன்’ ஆகிய படங்களுக்கு பின் சமூக கருத்துக்கள் உள்ள படத்தில் நடித்து வந்தார். அதன்பின்னர் வந்த இவரின் சமீபத்திய வரவான ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘கத்தி’, உள்ளிட்ட படங்கள் சமூகம் சார்ந்த கதைகளையே கொண்டிருந்தது. எனவே தன் புதிய படங்களுக்காக புதிய முடிவெடுத்துள்ளாராம்.

அதாவது மீண்டும் தன் பழைய பாணிக்கே திரும்பவுள்ளராம். தற்போது அட்லி இயக்கும் ‘விஜய் 59’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா மற்றும் மோகன் ராஜா படங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. எனவே ‘விஜய் 60’, ‘விஜய் 61’ ஆகிய படங்களில் ரொமான்ஸ் விஜய்யை நாம் பார்க்கலாம்.