ஸ்ருதியால் விஜய்யே தடுமாற… அஜித்தின் நிலைமை?


ஸ்ருதியால் விஜய்யே தடுமாற… அஜித்தின் நிலைமை?

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் 4 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். முருகதாஸ் இயக்கிய சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ஸ்ருதி. ஆனால் கஜினி கூட்டணி இம்முறை சற்று தடுமாறியது.

அதுபோல ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ படமும் இதே நிலைமைதான். படத்தின் ‘கொல வெறி’ பாடல் உலகம் முழுவதும் ஹிட்டடித்தாலும் படம் பெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து வந்த விஷாலின் ‘பூஜை’ பட நிலைமையும் நாம் அறிந்ததே.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான விஜய்யின் ‘புலி’ படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துள்ளன. கடந்த சில வருடங்களில் வெளியான விஜய்யின் ‘கத்தி’, ‘ஜில்லா’, ‘துப்பாக்கி’, ‘நண்பன்’ உள்ளிட்ட படங்கள் பெரும் ஹிட்டாகியது. ஆனால் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி வெளியான ‘புலி’க்கு சற்று தடுமாற்றமே. ஒருவேளை இது ஸ்ருதியின் ராசியாக இருக்குமோ? என்று வலைத்தளவாசிகள் கமெண்ட் அடிக்கத் தொடங்கிவிட்டனர்.

இதனையறிந்த அஜித் ரசிகர்களோ பீதியில் உள்ளனர். அஜித் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ‘வேதாளம்’ படத்தில் ஸ்ருதி நடித்துள்ளார். எனவே அதன் நிலைமை என்னவாகுமோ? என்ற கவலையில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.

இதுஒரு புறம் இருக்கட்டும். நாம் சொல்வது என்னவென்றால்… படம் வெற்றி பெற்றால் ஹீரோவை கொண்டாடும் ரசிகர்கள் படத்தின் தோல்விக்கு மட்டுமே ஹீரோயினை பொறுப்பேற்க சொல்வது நியாயமா? கதையும் படமாக்கப்பட்ட விதமும் நன்றாக இருந்தால் ரசிகர்கள் ஆதரவு நிச்சயம் உண்டு. படத்தின் வெற்றியை அதுவே தீர்மானிக்கும் என்பதே நிதர்சன உண்மை.