விஜய்யை மீண்டும் காதல் பாதைக்கு அழைக்கும் இயக்குனர்..!


விஜய்யை மீண்டும் காதல் பாதைக்கு அழைக்கும் இயக்குனர்..!

சில வருடங்களாக வெறும் ஆக்ஷன் கதையில் மட்டுமே நடித்து வருவதால், மீண்டும் காதல் பாதைக்கு திரும்ப முடிவு எடுத்து இருக்கிறாராம் விஜய்.

கடந்த 1999ஆம் ஆண்டில் விஜய்யுடன் இணைந்த முதல் ராசியோ என்னவோ இயக்குனர் எழிலுக்கு அப்படியொரு சூப்பர் ஹிட் கிடைத்தது.

‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற படத்தை இயக்கி, அதில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் எழில்.

விஜய்யின் கேரியரில் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது.

இந்நிலையில் மீண்டும் இருவரும் இணையவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Related