விஜய்யுடன் மீண்டும் இணையும் ‘தனி ஒருவன்’ ராஜா!


விஜய்யுடன் மீண்டும் இணையும் ‘தனி ஒருவன்’ ராஜா!

மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை மட்டுமே ரீமேக் செய்ததால் ரீமேக் ராஜா என்ற அழைக்கப்பட்டவர் ஜெயம் ராஜா. ஆனால் இவரே சொந்தமாக இயக்கிய ’தனி ஒருவன் பட ரீமேக்கிற்கு இன்று பலத்த போட்டி உருவாகியுள்ளது. படம் வெளியாகி 50 நாட்களை கடந்தும் 93 அரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ராஜா இயக்கிய அனைத்து படங்களிலும் இவரது தம்பி ஜெயம் ரவியே நாயகனாக நடித்திருந்தார். இன்று ‘தனி ஒருவன்’ வெற்றியால் பல வாய்ப்புகள் வந்தாலும் அதற்கு முன்பே நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தவர் விஜய் மட்டுமே என்கிறார் ராஜா. இதனை பலமுறை படமேடைகளில் சொல்லியிருக்கிறார் ராஜா.

ந்நிலையில் இவர்களின் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் விஜய்யை சந்தித்து ஒரு கதையை ராஜா சொன்னாராம். அக்கதை விஜய்யை மிகவும் கவர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது விஜய் 60′ படமாக இருக்குமா? அல்லது ‘விஜய் 61’ இருக்குமா? என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை.