விற்பனையில் கலக்கும் விஜய்-சங்கீதா ஜோடியின் பட்டுச் சேலைகள்!


விற்பனையில் கலக்கும் விஜய்-சங்கீதா ஜோடியின் பட்டுச் சேலைகள்!

மற்ற மாநிலங்களை விட தமிழக மக்களுக்கும் சினிமாவிற்கும் உள்ள நெருக்கம் மிகமிக அதிகம். இங்குள்ள ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர், நடிகைகள் கொண்டாட எப்போதும் தவறியதில்லை.

சில வருடங்களுக்கு முன் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள் அவரது புகைப்படங்களை தங்களது பனியன்களில் பிரிண்ட் செய்து அணிந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ரஜினி கமல் ரசிகர்களும் இதனை பின்பற்றி வந்தனர். இவர்களைத் தொடர்ந்து இன்று விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் ரசிகர்களும் இந்த களத்தில் குதித்துவிட்டனர்.

ஒரு படம் பற்றிய அறிவிப்பு வந்தாலே அந்த டைட்டிலுடன் நடிகரின் படம் ரசிகர்களின் ஆடைகளில் வரையப்பட்டிருக்கும். தற்போது ரசிகர்களுக்குள் போட்டி அதிகளவில் ஏற்பட்டுள்ளதால் ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசமாக நடிகர்களை போற்றி வருகின்றனர். இதுநாள் வரை இதுமாதிரியான ரசனை ஆண் ரசிகர்களிடம் மட்டுமே இருந்து வந்தது.

இந்நிலையில் பெண் ரசிகைகளையும் கவர விஜய் ரசிகர்கள் புது யுக்தியை கையாண்டுள்ளனர். விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரது படங்கள் பொறிக்கப்பட்ட பட்டு சேலைகளை தற்போது விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். சில இடங்களில் விஜய் மன்றத்தினரே இந்த சேலைகளை வாங்கி விநியோகம் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.