சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.!


சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.!

சிவாஜி கணேசனால் உருவாக்கப்பட்டு 58 வருடங்களாக படங்களை தயாரித்து வரும் நிறுவனம் சிவாஜி புரொடக்ஷன்ஸ்.

இத்தனை வருடத்தில் 22 தமிழ் படங்களையும் 2 இரண்டு இந்திப் படங்களை மட்டுமே இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

ரஜினி, கமல், அஜித் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இந்நிறுவன தயாரிப்பில் நடித்துள்ளனர்.

தற்போது முதன்முறையாக விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் விஜய்யின் நடிப்பில் உருவாகவுள்ள 61வது படமாகும்.
இப்படத்தை தெறி இயக்குனர் அட்லி அல்லது ஜில்லா இயக்குனர் ஆர்.டி. நேசன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையில் விக்ரம் பிரபு நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அறிமுக இயக்குனர் அசோக் இயக்க, ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இதில் விக்ரம் பிரபுடன் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா.