குஷ்பூவுக்காக விட்டுக் கொடுத்த எமன்..!


குஷ்பூவுக்காக விட்டுக் கொடுத்த எமன்..!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பிரபல நட்சத்திரங்கள் பங்கு பெறும் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகை குஷ்பு. இதற்காக செட்டை ஒன்றை அமைத்து இதன் படப்பிடிப்பை ஏவிஎம் ஸ்டூடியோடிவில் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு ஒதுக்கப்பட்ட தேதிகள் முடிவடைந்ததால் செட்டை கலைக்கவிருந்தனர். ஆனால் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படவிருப்பதால் அங்கேயே சூட்டிங்கை தொடர விரும்பினாராம் குஷ்பு.

ஆனால் அடுத்த நாள் முதல், எமன் படப்பிடிப்புக்காக செட் ஒதுக்கப்படவே, விஜய் ஆண்டனியுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் குஷ்பு. எனவே குஷ்புவிற்காக விஜய் ஆண்டனி விட்டு கொடுத்தாராம்.