கமல்ஹாசனை முந்துவாரா ‘எமன்’ விஜய் ஆண்டனி..?


கமல்ஹாசனை முந்துவாரா ‘எமன்’ விஜய் ஆண்டனி..?

நான், அமரகாவியம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஜீவா சங்கர். இவர் தற்போது தான் அறிமுகப்படுத்திய நாயகன் விஜய் ஆண்டனி மற்றும் நாயகி மியா ஜார்ஜ் ஆகியோரை இணைத்து எமன் என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 10ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இதன் படப்பிடிப்பை தொடங்கி ஒரே ஷெட்யூட்டிலில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். அதாவது 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டு தீவிரமாக பணியாற்ற தயாராகி வருகிறார்கள்.

கமல் தன்னுடைய பாபநாசம் படத்தை 40 நாட்களில் முடித்து கொடுத்தார். எனவே விஜய் ஆண்டனி கமலை முந்தி, தன் சூட்டிங்கை முடித்துக் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.