‘ஒரே ஒரு முறைதான்…’ ஹன்சிகாவை பாராட்டிய விஜய்..!


‘ஒரே ஒரு முறைதான்…’ ஹன்சிகாவை பாராட்டிய விஜய்..!

‘கத்தி’ படத்தை தொடர்ந்து ‘புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இப்படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நந்திதா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், சத்யன், கருணாஸ், தம்பி ராமையா, விஜயகுமார், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இப்படத்தின் டப்பிங் மற்றும் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்… படத்தில் உங்களது ஹீரோ எப்படி? என்று பெரும்பாலும் நாயகிகளிடம் கேட்பது வழக்கம். அவர்களும் அவர் நல்லவர், வல்லவர் என்று பாராட்டி புகழ் மாலை சூட்டி மகிழ்வர். ஆனால் படத்தின் நாயகியை பற்றி அவ்வளவாக முன்னணி நடிகர்களிடம் கேட்பது கிடையாது.

ஆனால் கேட்காமலே படத்தின் நாயகி பற்றி சொல்ல நல்ல மனம் வேண்டும். இதற்கு ஒரு சிலரை உதாரணமாக கூறலாம். அதில் நடிகர் விஜய் முக்கியமானவர். திறமை உள்ளவர்களை பாராட்டி மகிழ்பவர் அவர்.

இந்நிலையில் ‘புலி’ படத்தில் ஹன்சிகாவின் நடிப்பை புகழ்ந்து வருகிறார் விஜய். படத்தில் சரித்திர காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இதில் இளவரசியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஒரு காட்சியின் போது சரித்திர கால வசனத்தை பேசி ஒரே டேக்கில் ஓகே பெற்றுவிட்டாராம் ஹன்சிகா. வடஇந்தியாவை சேர்ந்த நடிகை சரித்திர கால தமிழ் வசனத்தை பேசி அசத்தியதை மனதார புகழ்ந்துள்ளார் இளைய தளபதி.

சரிதான்… வாழ்த்துறதுக்கும் ஒரு நல்ல மனசு வேணுமுல்ல…