அஜித்தின் ‘வேதாளம்’ கெட்டப்பை பாராட்டிய விஜய்!


அஜித்தின் ‘வேதாளம்’ கெட்டப்பை பாராட்டிய விஜய்!

தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக பார்க்கப்படும் ரஜினி-கமல் ஆகிய இருவரின் நட்பு இந்த உலகம் அறிந்ததே. ஆனாலும் இவர்களது ரசிகர்களில் சிலர் இன்னும் எதிரியாகவே இருந்து வருகின்றனர். இவர்களைப்போல அஜித்-விஜய் ரசிகர்கள் மோதி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனால் விஜய்யும் அஜித்தும் தங்கள் நிஜ வாழ்வில் நட்பு பாராட்டி வருகின்றனர். ஒவ்வொருவரின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் நட்பை மெய்ப்பித்து வருகின்றனர். ஒருவர் நடித்த படத்தை மற்றவர் பார்த்து பாராட்டியும் வருகின்றனர். மேலும் அலைபேசியிலும் ஒருவர் நடிப்பு குறித்து ஒருவர் தங்களது அபிப்ராயங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது படப்பிடிப்புன் இடைவேளையின் போது அஜித் நடித்து சமீபத்தில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் டீசரை பார்த்துள்ளாராம். அப்போது ‘அஜித்துக்கு இந்த கெட்டப் நல்லா இருக்கு’ என்றாராம். விஜய் இவ்வாறு கூறியதும் ஒட்டுமொத்த படக்குழுவும் ஆச்சர்யப்பட்டதாம்.

மேலும் ‘வேதாளம்’ டீசரைப்பார்த்தபடி விஜய் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.