அட்லி படக்குழுவுடன் விளையாடி அசத்திய விஜய்!


அட்லி படக்குழுவுடன் விளையாடி அசத்திய விஜய்!

விஜய் தனது நடிப்பில் உருவாகும் 59வது படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கும் இப்படத்திற்கு ‘தாறுமாறு’ எனத் தலைப்பிடப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், பிரபு, ராதிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது.

இதனிடையில், படப்பிடிப்புக்கு இடையில் கிடைக்கும் நேரங்களில் தனது படக்குழுவினருடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடி வருகிறாராம் விஜய். அந்த புகைப்படங்கள் படக்குழுவினர் இணையத்தளங்களில் பதிவேற்றி விட தற்போது சமூக வலைத்தளத்தில் இது வைரலாக பரவி வருகிறது.

மேலும் விஜய் போன்ற பெரிய நடிகர் தங்களுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடியதை படக்குழுவினர் பெருமையாக பேசி வருகின்றார்களாம். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.