‘தெறி’யில் மீனா மகள் நைனிகா…. ‘தெறி 2’வில் யார் மகள் தெரியுமா..?


‘தெறி’யில் மீனா மகள் நைனிகா…. ‘தெறி 2’வில் யார் மகள் தெரியுமா..?

தெறி படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கவிருக்கிறார்.

இது விஜய் நடிப்பில் 61வது படமாக வளரவுள்ளது. இப்படத்தை சிவாஜி புரொடக்ஷன் சார்பாக பிரபு தயாரிப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தெறி 2 படத்தின் கதை குறித்த தகவல்கள் கசிந்து வருகிறது.

முதல் பாகத்தில் விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார்.

இதன் க்ளைமாக்ஸில் கொஞ்சம் வளர்ந்த பெண்ணாக விஜய்யின் சொந்த மகள் திவ்யா சாஷா நடித்திருந்தார்.

எனவே, தற்போது உருவாகவுள்ள தெறி 2-வில் திவ்யா நீடிப்பார் என கூறப்படுகிறது. இவரை சுற்றி கதை நகருவதாக கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் இதில் எமி ஜாக்சன், பிரபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் தொடர்வார்கள் எனத் தெரிகிறது.