‘தெறி’ வெற்றியை கொண்டாடிய விஜய்… அதிருப்தியில் நடிகர் சங்கம்…!


‘தெறி’ வெற்றியை கொண்டாடிய விஜய்… அதிருப்தியில் நடிகர் சங்கம்…!

கடந்த 14ஆம் தேதி உலகம் முழுக்க விஜய் நடித்த தெறி ரிலீஸானது. படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதையொட்டி படக்குழுவினர் தெறி வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

இவ்விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் விஜய், பேபி நைனிகா, நடிகை மீனா, இயக்குநர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், இயக்குனர் அட்லி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கேக் வெட்டிய விஜய்யும் அட்லியும் மாறி மாறி கேக் ஊட்டிக் கொண்டனர்.

இப்படத்தின் வசூல் விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப் போவதாக என கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் தேதி நட்சத்திர கிரிக்கெட் சென்னையில் நடைபெற்றது.

ஆனால் இதில் கலந்து கொள்ளாத விஜய் அன்று நடைபெற்ற தெறி வெற்றி விழாவில் மட்டும் கலந்துக் கொண்டது நடிகர் சங்கத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.