புலி அப்டேட்ஸ் : தேவி ஸ்ரீபிரசாத் இசையில் விஜய் பாடிய பாட்டு!


புலி அப்டேட்ஸ் : தேவி ஸ்ரீபிரசாத் இசையில் விஜய் பாடிய பாட்டு!

நடிகர் விஜய்யின் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் திரையுலகம் அறிந்ததே. எந்தவிதமான ரிஸ்க்கான ஸ்டெப்பாக இருந்தாலும் மிகவும் கேஷுவலாக ஆடி தன் ரசிகர்களை உற்சாகபடுத்துபவர். நடனம் மட்டுமா? தன் வசீகர குரலால் ரசிகர்களை வசியம் செய்து வைத்திருப்பவர்.

‘ரசிகன்’ படத்தில் ரசிகர்களுக்காக பாடிய விஜய் இன்றுவரை ஒரு பாடகராகவும் தொடர்ந்து வருகிறார். தன் படத்தில் மட்டுமல்ல தன் நண்பர் சூர்யாவின் ‘பெரியண்ணா’ படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார். இதுவரை 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் விஜய்.

‘கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன்…’, ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா…’, ‘கண்டாங்கி… கண்டாங்கி…’, ‘செல்ஃபிபுள்ள…’ போன்ற பாடல்களை தொடர்ந்து ‘புலி’ படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார். வைரமுத்து வரிகளுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

சிம்புதேவன் இயக்கியுள்ள ‘புலி’ படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நந்திதா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், சத்யன், கருணாஸ், தம்பி ராமையா, விஜயகுமார், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து உள்ளனர்.