‘தலைவா’ நஷ்டத்தால் தளபதி எடுத்த அதிரடி முடிவு!


‘தலைவா’ நஷ்டத்தால் தளபதி எடுத்த அதிரடி முடிவு!

சிம்புதேவன் இயக்கிய ‘புலி’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதுவரை பெயரிடப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளி தினத்தில் வெளியிடவிருக்கின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறாராம் இயக்குனர்.

எனவே தனது அடுத்த படத்தை உறுதி செய்யும் நிலைக்கு வந்துவிட்டார் விஜய். இப்படத்தின் இயக்குனர் யார்? என்ற சர்ச்சை பல மாதங்களாகவே மீடியாவை கலக்கி வருகிறது. முதலில் எஸ். ஜே. சூர்யா மட்டும்தான் இதில் முன்னணி வகித்தார். பின்னர் இவருடன் மோகன் ராஜா மற்றும் ஹரி கலந்து கொண்டனர். இதனால் விஜய் ரசிகர்கள் முதல் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாதான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகவும் அவர் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்டு, லொகேசன் பணிகளில் மும்முரமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்த வரும் செய்திகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘தலைவா’ படத்தை தயாரித்த ஸ்ரீ மிஸ்ரி புரொடக்சன்ஸ் சந்திரபிரகாஷ் ஜெயின்தான் ‘விஜய் 60’ படத்தை தயாரிக்கிறாராம். அதற்கு காரணம், ‘தலைவா’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் இப்படியொரு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.