‘விஜய் 60’ படம் குறித்து இளைய தளபதியின் முடிவு!


‘விஜய் 60’ படம் குறித்து இளைய தளபதியின் முடிவு!

‘புலி’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், மீனா மகள் நைனிகா, கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு இந்த வருட இறுதிக்குள் அல்லது ஜனவரியில் முடிவடையும் எனத் தெரிகிறது.

பொதுவாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தன் அடுத்த படத்தை உறுதி செய்து விடுவது விஜய்யின் வழக்கம். ஆனால் இம்முறை இவரின் அடுத்த படம் குறித்த தகவல் சற்று குழப்பத்தில் உள்ளது. இதுநாள் வரை எஸ். ஜே. சூர்யா இயக்கக்கூடும் எனக் கூறி வந்தனர். ஆனால் தற்போது இயக்குனர் மோகன் ராஜா மற்றும் விஜய் சந்திப்பால் இதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ‘விஜய் 60′ படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கின்றார் என்பது மட்டுமே உறுதியாகியுள்ளதாம். இப்படத்தை இயக்குவது ஜெயம் ராஜா? அல்லது எஸ்.ஜே.சூர்யா? என்ற உறுதியான தகவல்கள் தீபாவளிக்கு பின்னர் அதிகாரபூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது.