நினைத்தது நடந்தது… விஜய் ரசிகர்கள் உற்சாகம்!


நினைத்தது நடந்தது… விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரஜினியின் ‘கபாலி’ படத்தின் பர்ஸ்ட் லுக், கமலின் ‘தூங்காவனம்’ படத்தின் ட்ரைலர், அஜித்தின் ‘தல 56’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. இவர்களைப் போல் முன்னணி நடிகரான விஜய்யின் ‘புலி’ சம்பந்தமாக எதுவும் வெளியாகவில்லை. இப்படம் முதலில் விநாயகர் சதுர்த்தி அன்றுதான் வெளியாகவிருந்தது என்பது நாம் அறிந்த்தே.

படம் தள்ளிப்போனதால் சற்று ஏமாற்றமடைந்த விஜய் ரசிகர்களுக்கு தற்போது வந்துள்ள செய்தி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதே விநாயகர் சதுர்த்தி சமயத்தில் ஒரு நாள் முன்னதாகவே ‘புலி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ள செய்தி அவர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளதாம்.

‘புலி’ படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் எந்த கட்டும் சொல்லாமல் அனைவரும் பார்க்கத்தகுந்த படமாக படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதற்கு முன் விஜய் நடித்த படங்களான நண்பன்’, ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி ஆகிய படங்களும் யு சான்றிதழ் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.