‘தல’ அஜித் ரூட்டுக்கு திரும்பும் ‘தளபதி’ விஜய்…!


‘தல’ அஜித் ரூட்டுக்கு திரும்பும் ‘தளபதி’ விஜய்…!

தமிழ் சினிமாவில் எந்தவொரு நடிகரும் செய்ய தயங்கும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை மங்காத்தாவில் அறிமுகப்படுத்தினார் அஜித்.

இதனைத் தொடர்ந்து ஆரம்பம், வீரம், வேதாளம் ஆகிய படங்களிலும் இந்த பாணியை பின் தொடர்ந்தார்.

தற்போது இவரது ரூட்டில் விஜய்யும் பயணிக்கத் துவங்கியுள்ளார் எனத் தெரிகிறது.

நாளை மறுநாள் வெளியாகவுள்ள தெறி படத்தில் ஒரு கெட்டப்பில் நரைத்த தாடியுடன் நடித்துள்ளார் விஜய். புலி படத்திலும் ஒரு காட்சியில் அப்படி தோன்றியிருந்தார் விஜய்.

மேலும் இதுநாள் வரை விஜய் படங்களுக்கு பெயரிடப்படாமல் இருந்தால், அப்படங்கள் விஜய் 59, விஜய் 60 என்றே அழைக்கப்பட்டன.

ஆனால் முதன்முறையாக நேற்று பரதன் இயக்கவுள்ள படத்திற்கு ‘தளபதி 60’ என்று பெயரிட்டு படக்குழுவினர் அறிவித்தனர்.

பெயரிடப்படாத அஜித் படங்களை தல 56, தல 57 என்று அழைத்து வருவது போல் தற்போது விஜய் படங்களையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.