கல்விக்காக லாரன்ஸிடம் ரூ. 5 லட்சம் கொடுத்த விஜய்!


கல்விக்காக லாரன்ஸிடம் ரூ. 5 லட்சம் கொடுத்த விஜய்!

ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் நடிப்பில் வேறுபட்டு இருந்தால் நடிகர் லாரன்ஸ் மற்ற நடிகர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுவார். இவரைப் போல் ஒரு சில நடிகர்கள் நற்பணிகளை செய்து வந்தாலும் மற்றவர்கள் செய்யாத ஏதோ ஒன்றை செய்து தனித்து நிற்பார்.

இதனிடையில் தன்னை பெற்ற தாயாருக்காக பூவிருந்தவல்லியில் கோயில் ஒன்றை கட்டி வருகிறார். கடந்த மே 11ஆம் தேதி இதற்கான அடிக்கலை நாட்டினார். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் அங்குள்ள குழந்தைகள் விரும்பியதால் தன் நண்பர் விஜய்யின் ‘புலி’ படத்தை திரையிட்டு காட்டினார்.

இந்நிலையில் குடிசைப் பகுதிகளில் வாழும் குழந்தைகள் உயர்தரமான பள்ளியில் படிப்பதற்காக ஐந்து லட்சம் ரூபாயை லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு விஜய் வழங்கினார். இவரைப்போலவே லாரன்ஸின் அறக்கட்டளைக்கு ஜெய், விஜய்சேதுபதி, சிம்பு, தமன்னா, டாப்ஸி ஆகியோரும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.