விமர்சனங்களை உடைத்தெறிந்த விஜய்யின் ‘புலி’


விமர்சனங்களை உடைத்தெறிந்த விஜய்யின் ‘புலி’

அக்டோபர் 1ஆம் தேதி தமிழக ரசிகர்களால் அதிகம் கேட்கப்பட்ட வார்த்தை ‘விஜய் படம் புலி எப்படி இருக்கு?’ என்பதுதான். படம் ஓகே… கிராபிக்ஸ் நல்லா இருக்கு, விஜய் மாஸ், படம் எதிர்பார்த்த அளவு இல்லை, இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம் இப்படி கலவையான விமர்சனங்களே வந்தன.

இந்நிலையில் இதுபோன்ற விமர்சனங்கள் ‘புலி’ படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் நிரூபித்து வருகின்றது.
இப்படம் உலகம் முழுவதும் ரூ.65 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடிக்கும் மேல் வசூல் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது உள்ள சூழ்நிலையில் அதாவது தீபாவளி வரை பெரிய நட்சத்திரங்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் ‘புலி’யின் வசூல் இன்னும் கூடும் எனத் தெரிகிறது. முக்கியமாக படம் குழந்தைகளையும் பெண்களையும் கவர்ந்துள்ளதாக தெரிகிறது.

ரஜினிகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் பாஸிட்டிவ்வான விமர்சனங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.