ரஜினி, அஜித்தை முந்தினார்… எம்ஜிஆர் பாணியில் ‘தெறி’ விஜய்..!


ரஜினி, அஜித்தை முந்தினார்… எம்ஜிஆர் பாணியில் ‘தெறி’ விஜய்..!

விஜய்யின் தெறி டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களை யுடியூப்பில் தாண்டியுள்ளது. இதனிடையில் சில மணி நேரம் இது தடை செய்யப்பட்டதும் தாங்கள் அறிந்ததே.

மீண்டும் பார்வைக்கு வந்த இந்த டீசர் தற்போதுவரை 31 லட்சம் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. இதுவரை யுடியூப்பில் சாதனை புரிந்த ரஜினியின் ‘கோச்சடையான்’, விக்ரமின் ‘ஐ’ ஆகிய படங்களை முந்திவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அஜித்தின் ‘வேதாளம்’ டீசர் வெளியாகி 10 மணி நேரத்தில் 79,000 லைக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால் தெறி டீசர் வெளியாகி அதே 10 மணி நேரத்தில் 1,20,000 லைக்குகளை பெற்றுள்ளதாம்.

இந்த டீசரில், விஜய் காக்கி உடையில் பள்ளியில் பாடம் நடத்துவது போல் ஒரு காட்சி இருக்கிறது. இதுபோல் ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் கைதிகளை திருத்தும் வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார்.

எனவே விஜய்யும் எம்ஜிஆர் பாணியில் கைதிகளை திருத்தப் போகிறாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எப்படியோ… தியேட்டரை தெறிக்க விட காத்திருக்கின்றனர் தளபதி ரசிகர்கள் என்பது மட்டும் நிஜம்…