வில்லன் கமல்-ஹீரோ விஜய்…. இது சிவகார்த்திகேயன் நண்பரின் ஆசை…!


வில்லன் கமல்-ஹீரோ விஜய்…. இது சிவகார்த்திகேயன் நண்பரின் ஆசை…!

அருண் ராஜா காமராஜா… தன் ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனத்துடன் எடுத்து வைத்து தமிழக ரசிகர்கள் தன் பக்கம் ஈர்த்து வருபவர் இவர்.

அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் ஆர்யா, சந்தானத்தின் நண்பராக நடித்திருந்த இவர் தற்போது தெறி படத்தில் ஒரு பாடலை எழுதி பாடியும் இருக்கிறார்.

பாடல் ஆசிரியர், பாடகர், நடிகர் என வலம் வரும் இவர் விரைவில் முழு நேர இயக்குனராகவும் மாறவிருக்கிறாராம்.

இது குறித்து, இவரது சமீபத்திய பேட்டியில் இவர் கூறியதாவது…

“சிவகார்த்திகேயனும் நானும் நண்பர்கள். “முகப் புத்தகம்” என்ற குறும்படத்தில் நடித்த போது அட்லியின் நட்பு கிடைத்தது. அது இன்று வரை தொடர்கிறது.

தற்போது வளர்ந்து வரும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கிறேன். மேலும் பென்சில், காத்திருப்போர் பட்டியல், யானும் தீயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன்.

ஒரு இயக்குனராக ஆக வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காக ஒரு கதையும் ரெடி செய்து வைத்துள்ளேன். அதில் கமல் சார் வில்லனாகவும், விஜய் சார் ஹீரோவா நடிச்சா நல்லா இருக்கும்.

இப்போ அவர்களை சந்திப்பது சரியாக இருக்காது. ஒரு நல்ல டைரக்டர் என்று பெயர் எடுத்த பிறகு அவர்களை சந்திப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.