‘விஜய் 60’ படத்திற்காக மீண்டும் இணையும் விஜய்-சூர்யா!


‘விஜய் 60’ படத்திற்காக மீண்டும் இணையும் விஜய்-சூர்யா!

‘புலி’ படத்தை தொடர்ந்து ‘விஜய் 59’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், குழந்தை நட்சத்திரமாக மீனா மகள் நைனிகா, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தாணு தயாரித்து வருகிறார்.

இதனிடையில் ‘புலி’ படப்பிடிப்பின் போது விஜய்யை சந்தித்துள்ளார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. தான் பதிவு செய்து வைத்திருந்த ‘புலி’ பட டைட்டிலை விஜய்க்காக விட்டு கொடுத்திருந்தார் என்பது தாங்கள் அறிந்ததே. இவர்கள் சந்திப்பின்போது விஜய்யிடம் ஒரு வரி கதையை கூறியுள்ளார் சூர்யா. அது பிடித்துப்போகவே உடனே ஓகே சொல்லிவிட்டாராம் விஜய்.

தற்போது அந்த ஒரு வரிக்கதைக்கு முழு வடிவம் கொடுத்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. ‘தலைவா’ படத்தை தயாரித்த சந்திரபிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ‘குஷி’ வெற்றிப்படத்தை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது.