ரஜினி பட ரீமேக் : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய்!


ரஜினி பட ரீமேக் : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய்!

ரஜினி படத்தில் நமக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் என்ன? ரஜினி படங்களால் நமக்கு வாய்ப்பு கிடைக்கட்டுமே என்ற நம்ம இயக்குனர்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல.

அவரின் படங்களை ரீமேக் செய்து கல்லா கட்டி விடலாம் என்ற முடிவுக்கு வந்த இயக்குனர்கள் பழைய படங்களை தூசி தட்ட ஆரம்பித்து விட்டனர். அந்த வரிசையில் தற்போது கமர்ஷியல் கிங் கேஎஸ் ரவிக்குமாரும் இணைந்து விட்டார்.

ரஜினிக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது ரஜினி படத்தை கொண்டு மற்றொரு ஹீரோவுக்கு ஹிட் கொடுக்கவிருக்கிறார்.

ரஜினியின் கேரியரில் மாபெரும் ஹிட்டடித்த மன்னன் படத்தை ரீமேக் செய்யவிருக்கிறாராம் கேஎஸ்ஆர். இப்படத்தில் விஜய் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரை அணுகி இருக்கிறார். உடனே விஜய்யும் ஓகே சொல்லிவிட்டதாக நம்பத்தகுந்த நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பே மின்சார கண்ணா படத்திற்காக விஜய், கேஎஸ் ரவிக்குமார் இணைந்து பணியாற்றியது நாம் அறிந்ததே.