‘விஜய்யின் எளிமையே ஒரு பரிசுதான்..’ நிவின் பாலி நெகிழ்ச்சி..!


‘விஜய்யின் எளிமையே ஒரு பரிசுதான்..’ நிவின் பாலி நெகிழ்ச்சி..!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கி நிவின்பாலி நடித்த பிரேமம் தென்னிந்திய சினிமாவில் ஒரு புதிய உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் விஜய்யும் நிவின் பாலிக்கு நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய்யை சந்தித்தது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நிவின்பாலி குறிப்பிட்டுள்ளதாவது… “விஜய் சார் அவரது ஆபிசுக்கு என்னை அழைத்ததை நம்ப முடியவில்லை. மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்த்தில் இருக்கும் அவர் மிக எளிமையாக நடந்து கொண்டு ‘ப்ரேமம்’ படம் குறித்து பாராட்டினார்.

கேரள ரசிகர்கள் மற்றும் சினிமாவை பற்றி பேசினார். அந்த வார்த்தைகள் மறக்கமுடியாது. எனக்கு அவரிடமிருந்து கிடைத்த பாராட்டுக்கள் மிக அற்புதமானது.

அவருடைய நேர்மையும் எளிமையும் நமக்கு கிடைத்த ஒரு பரிசு. விஜய் சாரின் ‘தெறி’ படத்திற்காக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.