50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…!
Published: May 30, 2016
ஓய்வில்லாமல் படங்களில் நடித்து வந்தாலும், தன் ரசிகர்களுக்காக நேரங்களை செலவிடுபவர் இளைய தளபதி விஜய்.
இந்நிலையில் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ட்ரைவர்கள் விஜய்யை சந்திக்க சென்றுள்ளனர்.
எனவே அவர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார்.
இதனால் அந்த ஆட்டோ டிரைவர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்களாம்.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து பேசினாராம் அவர்களுடனும் நேரத்தை செலவிட்டாராம் தளபதி.