‘நயன்தாரா வேண்டாம், வேற ஆள பாருங்க…’ விஜய்


‘நயன்தாரா வேண்டாம், வேற ஆள பாருங்க…’ விஜய்

கடந்த வாரம் விஜய்யின் ‘புலி’ வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டியும் குழந்தைகள் இப்படத்தை விரும்பி பார்ப்பதால் பாதிப்பில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து அட்லி இயக்கும் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் விஜய். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா இயக்கி ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இது விஜய் நடிப்பில் 60வது படமாக உருவாகவுள்ளது.

இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக ஒரு டாப் ஹீரோயினை நடிக்க வைக்க எண்ணிய இயக்குனர் நயன்தாராவை பரிந்துரைத்துள்ளார். தயாரிப்பாளரும் சம்மதம் சொல்லிவிட்டாராம். ஆனால் விஜய்யோ… நயன்தாரா வேண்டாம். வேற ஆள பாருங்க என்றே ஒரேடியாக மறுத்துவிட்டாராம். தளபதிக்கு என்ன ஆச்சு? என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

இதற்கு முன்பு விஜய்யுடன் ‘சிவகாசி’, ‘வில்லு’ உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.