துல்கர் சல்மான் படத்திற்கு விஜய்-சூர்யா போட்டி..?


துல்கர் சல்மான் படத்திற்கு விஜய்-சூர்யா போட்டி..?

தமிழில் தற்போது தொடர்ச்சியாக மலையாள படங்களே ரீமேக் ஆகி வருகின்றன.

ஷட்டர், மெமரீஸ், த்ரிஷ்யம், பெங்களூர் டேஸ் ஆகிய படங்களை தொடர்ந்து பிரேமம் படத்திற்கு பலத்த போட்டி நிலவி வருகிறது.

தற்போது இதன் வரிசையில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து சூப்பர் ஹிட்டான ‘சார்லி’ படமும் இணைந்துள்ளது.

இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க விஜய் மற்றும் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இவர்களில் யாரேனும் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.