‘புலி’ வேட்டையை தொடங்கிய விஜய்…!


‘புலி’ வேட்டையை தொடங்கிய விஜய்…!

முதன் முறையாக விஜய்யை புலி படத்திற்காக இயக்கியுள்ளார் சிம்புதேவன். இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, நந்திதா, ரோபா சங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூலேகா என ஒரு நட்சத்திர கூட்டமே இணைந்துள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க நட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மிகுந்த பொருட்செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படத்தின் இசை, பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை ஆகஸ்ட் 20ஆம் தேதி யுடியூப் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 12 லட்சம் பார்வையாளர்கள் புலி ட்ரைலரை கண்டு ரசித்திருக்கிறார்கள். மேலும் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடி கொண்டே வருவதால் விரைவில் புலி ட்ரைலர் சாதனை படைக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடவுள்ளனர்.

புலி தன் வேட்டையை தொடங்கிவிட்டதோ…