‘புலி’ வேட்டை தீராது; ‘குஷி’யில் விஜய் ரசிகர்கள்.!


‘புலி’ வேட்டை தீராது; ‘குஷி’யில் விஜய் ரசிகர்கள்.!

விஜய்யின் படத்திற்கு ‘புலி’ என்று பெயர் வைத்ததால்தானே என்னவோ…. பாய்ச்சல் சற்று அதிகமாகவே உள்ளது. படத்தின் டீஸர், பர்ஸ்ட் லுக் வெளியானபோது சாதனை படைத்தது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலரும் தொடர்ந்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.

இப்டத்தின் ட்ரைலரை யுடியூப்பில் மட்டும் இன்று வரை சுமார் 5 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனையறிந்த விஜய் ரசிகர்கள் ‘எங்க புலி வேட்டை தீராது… இன்னும் இருக்கு’ என்று கூறி வருகின்றனர்.

இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, நந்திதா, ரோபா சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, வித்யூலேகா என ஒரு நட்சத்திர கூட்டமே இணைந்துள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க நட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.